3 6
இலங்கைசெய்திகள்

இலங்கையில் ஆயுதமேந்தி போராடிய ஜேவிபியும் விடுதலைப்புலிகளும் : சம்பிக்க ரணவக்க பகிரங்கம்

Share

இலங்கையின் சுதந்திரத்தின் பின்னரான காலப்பகுதியில் இரண்டு தரப்புக்கள் ஆயுதமேந்தி பேராடியதால் பல கலவரங்களுக்கு முகங்கொடுத்ததாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க (Champika Ranawaka) தெரிவித்துள்ளார்.

கண்டி (Kandy) – தலதா மாளிகையில் நேற்று (04) மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “சுதந்திரத்தின் பின்னரான 77 ஆண்டுகால வரலாற்றில் பல கலவரங்களுக்கு முகங்கொடுத்துள்ளோம்.

இந்த பௌத்த பூமியில் மக்கள் விடுதலை முன்னணியும், விடுதலைப் புலிகள் அமைப்பும் ஆயுதமேந்தி போராடின. இருப்பினும் இந்த நாட்டினதும், மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட்டன.

சுதந்திரத்தின் பின்னர் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் வாக்குறுதிகளை முன்னிலைப்படுத்தியே ஆட்சிக்கு வந்தன. அவர்களே நாட்டின் வளங்களை கொள்ளையடித்து நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளினார்கள்.

நாட்டின் இறையாண்மை சர்வதேச நாணய நிதியத்திடம் வழங்கி (IMF), நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் தேவைக்கேற்ப நாடு நிர்வகிக்கப்படுகிறது. தேர்தல் காலத்தில் மாத்திரம் கொள்கைகளை வெளியிடாமல் உண்மையான கொள்கையுடன் செயற்பட வேண்டும்.

தேர்தல் காலத்தில் முன்வைக்கும் கொள்கைகள் நாட்டின் அரசியலமைப்பு மற்றும் பொதுச் சட்டத்துக்கு இயைவானதாக காணப்பட வேண்டும்.

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு மாறாக செயற்படும் அரசியல்வாதிகளுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்களின் பதவிகள் பறிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம்.

ஜனாதிபதி அநுரகுமார (Anura Kumara) மீதான மக்கள் நம்பிக்கை வெகுவாக சிதைவடைந்துள்ளது. மக்கள் எதிர்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை.

மாறாக மக்களை திசைத்திருப்பி விடும் செயற்பாடுகளே முன்னெடுக்கப்படுகிறது. மக்கள் அரசியலில் ஏமாற்றமடைந்துள்ளார்கள் என்றே குறிப்பிட வேண்டும்“ என தெரிவித்தார்

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...