பசிலிடமிருந்து திருப்பி வாங்கப்பட்ட வீடு! போராட்டக்காரர்கள் செய்த செயல்
இலங்கைசெய்திகள்

பசிலிடமிருந்து திருப்பி வாங்கப்பட்ட வீடு! போராட்டக்காரர்கள் செய்த செயல்

Share

பசிலிடமிருந்து திருப்பி வாங்கப்பட்ட வீடு! போராட்டக்காரர்கள் செய்த செயல்

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுடன் தொடர்புடையதாக கூறப்படும் மல்வான மாளிகை தற்போது அரசுக்கு சொந்தமானது என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெளிவுபடுத்தியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ‘அரகலயா’ போராட்டத்தின் போது இந்த மாளிகை அரசுக்கு சொந்தமானது என்பதை அறியாமல் எரிக்கப்பட்டதாக நீதி அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்த மாளிகையை நீதி அமைச்சினால் கையகப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நீதியமைச்சர் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்

இது தொடர்பில் அமைச்சர் தெரிவிக்கையில்,“மல்வானை சொத்துக்கு எந்தவொரு தரப்பினரும் உரிமை கோரவில்லை என்பதை நான் செய்தித்தாள்கள் மூலம் அறிந்ததும், அதை நீதியமைச்சிடம் ஒப்படைப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை மறுநாள் சமர்ப்பித்தேன்.

அதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பான செயல்முறை இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. இது நீதித்துறை அமைச்சகத்தால் கையகப்படுத்தப்படும்.

துரதிர்ஷ்டவசமாக, அரகலயா ஆர்வலர்கள் அதைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். ஒருவேளை அது இப்போது அரசின் சொத்து என்பது தெரியாமல் அதை தீயிட்டுருக்கலாம்,” என்று அவர் கூறியுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 207
செய்திகள்இலங்கை

புத்தாண்டு விடுமுறை சோகம்: 4 நாட்களில் 20 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விடுமுறையைக் கொண்டாடும் வகையில் நீர்நிலைகளுக்குச் சென்றவர்களில், கடந்த ஏப்ரல் 12...

world 206
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மல்லாவியில் இரு யுவதிகள் பாலியல் துஷ்பிரயோகம்: மத போதகர் உள்ளிட்ட மூவர் அதிரடி கைது!

முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி – வவுனிக்குளம் பகுதியில் இரு யுவதிகளைப் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில்...

world 205
செய்திகள்இந்தியா

தமிழக வெற்றிக் கழகத்தின் 2026 தேர்தல் அறிக்கை: மகளிருக்குத் தங்கம் மற்றும் இலவச மின்சார வாக்குறுதி!

தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க.) தலைவர் விஜய், 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான...

world 204
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் 21 மாவட்டங்களுக்கு வெப்ப எச்சரிக்கை: பொதுமக்கள் அவதானமாக இருக்க அறிவுறுத்தல்!

இலங்கையின் 21 மாவட்டங்களில் இன்று (ஏப்ரல் 17) மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவு (Heat...