ரணில் ஜனாதிபதியாக ஆவார் என ஜே.ஆரும் நினைத்திருக்க மாட்டார்

22 632982268effc

தேர்தலில் தோல்வியடைந்து இருந்தாலும் தேசியப் பட்டியல் மூலம் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக வருவார் என ஜே.ஆர்.ஜயவர்த்தன கூட நினைத்திருக்க மாட்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (21) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“ஜே.ஆர்.ஜயவர்த்தன 44 வருடங்களுக்கு முன்னர் அரசியலமைப்பை உருவாக்கும் போது தேர்தலில் தோற்றவர் ஜனாதிபதியாக ஆவார் என நினைத்திருக்க மாட்டார்.

எனவே, இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில், நாட்டின் மக்களுக்கு நட்புறவான அரசியலமைப்பை உருவாக்குவதற்கு அனைவரும் ஒன்றாக செயற்பட வேண்டும்” என தெரிவித்தார்.

#SrilankaNews

Exit mobile version