8 55
இலங்கைசெய்திகள்

கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட : கொடூரமாக படுகொலை – கண்கண்ட சாட்சி அதிர்ச்சி வாக்குமூலம்

Share

கடத்தப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட : கொடூரமாக படுகொலை – கண்கண்ட சாட்சி அதிர்ச்சி வாக்குமூலம்

பிரபல சிங்கள ஊடகவியலாளரான பிரகீத் எக்னெலிகொட (Prageeth Ekneligoda) இராணுவத்தினரால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கண்கண்ட சாட்சியொருவர் பரபரப்புத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

சிங்கள மொழி யூடியூப் ஊடகவியலாளரான சுதந்த திலகசிறியின் சுதா கிரியேசன்ஸ் SUDA CREATION சனலில் நேற்று (29.12.2023) ஞாயிறு மாலை நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் மூலம் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த நிகழ்ச்சியில் தற்போதைக்கு வெளிநாட்டில் வதியும், இலங்கைக் கடற்படையின் முன்னாள் சிப்பாய் ஒருவர் கலந்து கொண்டிருந்தார்.

அவர் முன்னொரு காலத்தில் கடற்படையின் மெக்கானிக்கல் பிரிவில் சிப்பாயாக கடமையாற்றிய பிரியசாந்த என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.

கடற்படைச் சிப்பாய் பிரியசாந்தவின் தகவல்களின் பிரகாரம் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு, மட்டக்களப்பின் (Batticaloa) எருமைத் தீவில் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ளார்.

பிரகீத் எக்னெலிகொடவைக் கடத்திச் சென்ற குழுவில் எதிர்பாராதவிதமாக தானும் இணைக்கப்பட்டிருந்ததாகவும், அவரைக் கடத்திச் சென்ற போது அவர் ஊடகவியலாளர் என்பதோ, பிரகீத் எக்னெலிகொட என்பதோ தனக்குத் தெரிந்திருக்கவில்லை என்றும் குறித்த சிப்பாய் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் மட்டக்களப்பின் எருமைத் தீவுக்கு கொண்டு செல்லப்பட்ட பிரகீத் எக்னெலிகொடவின் தலையில் மூன்று துப்பாக்கிச் சூடுகள் நடத்தப்பட்டு அவர் படுகொலை செய்யப்பட்டதாகவும், செயலாளர் ஒருவரின் உத்தரவின் பேரிலேயே குறித்த படுகொலை நடத்தப்பட்டதாக அதற்குப் பொறுப்பாக இருந்த உயரதிகாரி தன்னிடம் தெரிவித்ததாகவும் கடற்படைச் சிப்பாய் பிரியசாந்த தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

பிரகீத் எக்னெலிகொடவின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய ரில்வான் எனப்படும் கொலையாளியும் பின்னொரு காலத்தில் மர்மமான முறையில் வாகன விபத்தொன்றில் கொல்லப்பட்டதாகவும் பிரியசாந்த தெரிவித்துள்ளார்.

இதுவரை காலமும் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டதாக நம்பப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் சம்பவத்தில், முதன்முறையாக அவர் படுகொலை செய்யப்பட்டதாக நம்பகமான ஒரு தகவல் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share
தொடர்புடையது
500x300 23304852 4 fog
செய்திகள்விளையாட்டு

இந்தியா – தென்னாப்பிரிக்கா 4-வது டி20 போட்டி ரத்து: லக்னோவில் கடும் பனியால் பாதிப்பு!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில்...

MediaFile 5 3
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கொத்மலை – இறம்பொடை மண்சரிவு: பெண்ணொருவருடையது என சந்தேகிக்கப்படும் உடல் பாகம் மீட்பு!

கொத்மலை – இறம்பொடை பகுதியில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கிக் காணாமல் போனவர்களில் ஒரு பெண்ணுடையது...

23 658fd712815b0
இலங்கைசெய்திகள்

பேருந்து – முச்சக்கர வண்டி மோதிய விபத்தில் தாய் மற்றும் இரண்டு வயது குழந்தை பலி!

தெஹியத்தகண்டிய, முவகம்மன பகுதியில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்ற கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

MediaFile 796x445 1
இலங்கைசெய்திகள்

பாதுகாப்பு அச்சுறுத்தல்: அநுராதபுரம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு!

வைத்தியசாலை வளாகத்தில் தோட்டாக்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து, தமக்கு உரிய பாதுகாப்பு இல்லை எனக் கூறி...