” குறுகிய அரசியல் நோக்கங்களை அடைவதற்காக செயற்படும் கட்சிகளுடன் இனி கூட்டணி வைத்துக்கொள்ளப்படமாட்டாது.” – என்று ஆளுங்கட்சியான ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஊடக சந்திப்பு அக்கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது. இதன்போதே கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இந்த அறிவிப்பை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” அரசாங்கம் மாறினாலும் தேசியகொள்கையென்பது மாறக்கூடாது. ஆனால் எமது நாட்டில் அந்த கொள்கை மாறுவதே நெருக்கடி நிலைமைக்கு ஓர் காரணமாகும். எமது திட்டங்களை குழப்பியடித்தவர்கள் இன்று வெளியேறிவிட்டனர்.
எனவே, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதை மட்டுமே இலக்காகக் கொண்டும், நாடாளுமன்ற ஆசன இருப்புக்காகவும் கூட்டணி வைத்துக்கொள்ள முன்வரும் கட்சிகளும் எமது அணியில் இனி இடமில்லை.
நாட்டின் எதிர்காலம் கருதி, எமது கொள்கைகளை ஏற்கக்கூடியவர்கள் இணையலாம். ” – என்றார்.
#SriLankaNews

