நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி மற்றும் புதிய அரசுஅமைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கே நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றம் எதிர்வரும் 17 ஆம் திகதியே கூடவிருந்தது. எனினும், நாட்டில் வன்முறை வெடித்துள்ளதால், முன்கூட்டியே கூட்டுமாறு கோரப்பட்டுள்ளது.
விசேட நாடாளுமன்ற அமர்வை கூட்டுவதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது.
#SriLankaNews