முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைக் கைதுசெய்வதற்காகக் குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரு குழுக்கள் குருநாகல் மற்றும் கொழும்புக்குச் சென்றுள்ளனர்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி காலிமுகத்திடல் வன்முறைச் சம்பத்தில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் சந்தேகநபர்களாக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகமகே உள்ளிட்ட நால்வரை சட்டமா அதிபர் திணைக்களம் நேற்று சந்தேகநபர்களாகப் பெயரிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews