முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைக் கைதுசெய்யுமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களம், கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் முன்வைதை்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இவ்வாறு பிடியாணை பிறப்பித்துள்ளது.
கடந்த மே 9ஆம் திகதி காலிமுகத்திடல் மற்றும் அலரிமாளிகைக்கு முன்பாக இடம்பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பிலேயே முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைக் கைதுசெய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, மே 9 மோதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மிலான் ஜயதிலக எம்.பி உள்ளிட்ட 12 பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment