யாழில் 20,000 இளைஞர் யுவதிகள் வேலையின்றி

images 2

யாழ்ப்பாண மாவட்டத்தில் 19,147 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் தேடுபவர்களாக யாழ். மாவட்ட செயலக மனித வலு வேலை வாய்ப்பு திணைக்களத்தில் பதிவினை மேற்கொண்டுள்ளதாக மாவட்ட செயலர் க.மகேசன் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் வேலையில்லா பிரச்சினையானது தேசிய மட்ட வேலையில்லா பிரச்சினைகளை விட அதிகமாக காணப்படுகின்றது.

21 வீதமானவர்கள் வடக்கு மாகாணத்தில் வேலையற்றவர்களாக உள்ளதாக மத்திய வங்கியின் வருடாந்த தகவல் தெரிவிக்கின்றன.

யாழில் கடந்த வருடம் 7.5 வீதமாக காணப்பட்ட வேலையற்றோர் வீதம் தேசிய மட்டத்தில் 4.5 வீதமாக காணப்பட்டது. எனினும் கடந்த வருடத்தை விட இந்த வருடம் வேலையற்றோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Exit mobile version