download 2 1 2
அரசியல்இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜீவன் தியாகராஜா நீதிமன்றத்தை நாடுமாறு யாழ்பிரதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு!

Share

ஜீவன் தியாகராஜா நீதிமன்றத்தை நாடுமாறு யாழ்பிரதி பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஸ்ரீதரன் சுமந்திரன் மற்றும் சித்தார்த்தன் உட்பட சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கயன் இராமநாதன் ஆகியோர் கூட்டத்தின் பங்கு பற்றி இடைநடுவில் வெளிநடப்பு செய்வதாக வெளியேறினர்

தையிட்டியில் விகாரை கட்டப்படக்கூடாது என ஏற்கனவே யாழ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது எனினும் ஒருங்கிணைப்பு குழுவில் எடுக்கப்பட தீர்மானத்திற்கு எதிராக விகாரை கட்டப்பட்டுள்ளது அதேபோல தற்பொழுது எமதுபாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்உட்படமேலும் இருவர் அங்கே முற்றுகைகக்குள் உள்ளார்கள் பொலிசார் மிகவும் மோசமாக செயற்பட்டு இருக்கிறார்கள்

அமைதியாக இருந்த மக்களை விரட்டி அடித்திருக்கின்றார்கள் எனவே நாங்கள் இந்த கூட்டத்தில் தொடர்ச்சியாக பங்கு பற்றுவது உசிதமானதல்ல என தெரிவித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தினை வெளிநடப்பு செய்வதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரன் கூட்டத்தில்தெரிவித்து வெளியேறினர்.

தையிட்டி விகாரைவிடயம் தொடர்பில்  நீதிமன்றத்தினை நாடுமாறு வடக்கு மாகாண ஆளுநர் யாழ்மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார்,

தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் உட்பட போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டோரைபொலிசார்  தாக்கியதாகவும் அத்துமீறி  விரட்டியதாகவும் யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களால் தெரிவிக்கப்பட்டது .

குறித்த விடயம் தொடர்பில் நீதிமன்றத்தை நாடுமாறு ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர் வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா யாழ்ப்பாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டதோடு குறித்த விடயம் தொடர்பில் நீதிபதியினை குறித்து இடத்திற்கு அழைத்துச் செல்வதும் மிக உசிதமான விடயம் எனவும் தெரிவித்திருந்தார்.

#srilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20 12
செய்திகள்இந்தியா

இலங்கை – இந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர்: ஆகஸ்ட் மாதம் நிவாரண நிதி திரட்டும் போட்டிகள்!

கடந்த நவம்பர் மாதம் இலங்கையைத் தாக்கிய ‘டித்வா’ (Ditwah) சூறாவளியால் ஏற்பட்ட பெரும் பாதிப்புகளிலிருந்து மீண்டு...

19 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி: இன்றைய நிலவரம்!

இலங்கை நகை வியாபாரிகள் சங்கத்தின் தரவுகளின்படி, கடந்த சில நாட்களாக நிலவிய ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில்,...

17 12
செய்திகள்உலகம்

மத்திய கிழக்கு மோதலால் உலகளவில் உயரும் விமான எரிபொருள் விலை: விமானப் பயணச்சீட்டுகளின் விலையில் நேரடி தாக்கம்!

மத்திய கிழக்கில் தற்போது நிலவும் போர்ச் சூழல் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை...

16 12
உலகம்செய்திகள்

ஈராக்கில் ஆளில்லா வானூர்தி தாக்குதல்: பிரான்ஸ் இராணுவ அதிகாரி உயிரிழப்பு, ஜனாதிபதி மக்ரோன் கண்டனம்!

ஈராக்கின் எர்பில் (Erbil) பிராந்தியத்தில் அமைந்துள்ள கூட்டு இராணுவத் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஆளில்லா வானூர்தி...