நாட்டின் தற்போதைய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக மெய்நிகர் முறைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைத் தாமதமின்றி நடத்துமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
பாதுகாப்பு என்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமின்றி பொதுமக்கள் தொடர்பிலும் அக்கறை செலுத்த வேண்டியதொரு விடயமாகும் எனவும் ருவிட்டர் பதிவொன்றில் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, மெய்நிகர் முறைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட வேண்டும் எனவும் ஜீவன் தொண்டமான் வலியுறுத்தியுள்ளார்.
#SriLankaNews