இலங்கைசெய்திகள்

உள்ளுராட்சி மன்ற தேர்தலின் எதிரொலி! அநுர கட்சியின் அதிரடி அறிவிப்பு

Share
11 7
Share

வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட பிற அரசியல் கட்சிகளுடன் தேசிய மக்கள் சக்தி கூட்டணி அமைக்காது என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்திற்கு ஊழல் இல்லாத தேசிய சீர்திருத்த திட்டத்தை தொடர ஒரு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

தனி ஒரு கட்சியாக தேசிய மக்கள் சக்தி தெளிவான மற்றும் முன்னணி வெற்றியைப் பெற்றுள்ளது. இது சிறப்பு வாய்ந்தது. அதிகாரங்களை நிறுவுவதற்கு சுயாதீன குழுக்களுடன் இணைந்து செயல்பட தேசிய மக்கள் சக்தி தயாராக உள்ளது.

ஆனால் வாக்காளர்களால் நிராகரிக்கப்பட்ட பிற அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைக்காது. முன்னணி கட்சியாக, எங்களுக்கு ஆட்சி செய்ய உரிமை உண்டு.

தேசிய மக்கள் சக்தி மீதான நம்பிக்கையை மக்கள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
2 17
இலங்கைசெய்திகள்

கண்டி மாவட்ட முடிவுகள் வெளியாகின..! தேசிய மக்கள் சக்தி முன்னிலை

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கண்டி மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள...

10 8
இலங்கைசெய்திகள்

சிறந்த பாடத்தை கற்பித்த தேர்தல் : ரணிலை குறி வைத்து வெளியாகியுள்ள விமர்சனம்

தேர்தல்களை ஒத்திவைக்க முயற்சிக்கும் எந்தவொரு அரசியல் தலைவருக்கோ அல்லது கட்சிக்கோ வாக்களிக்க வேண்டாம் என்று ஜனநாயக...

8 8
இலங்கைசெய்திகள்

பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை

பொலிஸ் அதிகாரிகள் என கூறி மோசடி நடவடிக்கையில் ஈடுபடும் நபர்கள் தொடர்பில் பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை...

9 8
இலங்கைசெய்திகள்

வட மாகாணத்தில் அநுர அரசின் தோல்விக்கான காரணம்

வட மாகாண மக்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாமையினாலேயே, உள்ளுராட்சி...