19 4
இலங்கைசெய்திகள்

ரி.ஐ.டியால் கைதான யாழ். இளைஞன் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Share

ரி.ஐ.டியால் கைதான யாழ். இளைஞன் – நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக கைதான இளைஞருக்கு நீதிமன்றம் பிணை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.

குறித்த உத்தரவானது இன்றைய தினம் (4.12.2024) யாழ்ப்பாணம் (Jaffna) நீதவான் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத தடுப்பு பிரிவு (TID) காவல்துறையினரால் இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் அண்மையில் கைது செய்யப்பட்டிருந்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் 72 மணி நேர விளக்கமறியலுக்குப் பின்னர் இளைஞன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் இன்றைய தினம் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் முற்படுத்தப்பட்டபோது, இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணையில் நீதவான் விடுவித்ததுடன் வெளிநாட்டு பயணத் தடையும் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
29 8
செய்திகள்விளையாட்டு

FIFA உலகக் கோப்பை 2026: அமெரிக்கப் போட்டிகளை மெக்சிகோவிற்கு மாற்ற ஈரான் கோரிக்கை!

அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய நாடுகளில் இணைந்து நடைபெறவுள்ள 2026-ஆம் ஆண்டுக்கான FIFA உலகக்...

28 7
உலகம்செய்திகள்

ஈரான் போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய பணிப்பாளர் ஜோ கென்ட் இராஜினாமா!

அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) பணிப்பாளர் ஜோ கென்ட், ஈரானுக்கு எதிரான போரில்...

27 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து: அண்ணன், தங்கை இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

யாழ்ப்பாணம் கொழும்புத்துறை வீதியில் நேற்றிரவு (16) இடம்பெற்ற பயங்கர வீதி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

26 8
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விஷ ஒளடதங்களை அழிப்பதற்கான சட்டத் திருத்தம்: புதிய நடைமுறைகளை வகுக்க குழு நியமனம்

விஷ ஒளடதங்கள் மற்றும் ஆபத்தான போதைப்பொருட்கள் தொடர்பான நீதிமன்றச் செயல்பாடுகளில் காணப்படும் சட்டச் சிக்கல்களைத் தீர்ப்பதற்காக,...