யாழ் பல்கலை ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி விழா

20220725 143049

யாழ் பல்கலைக்கழக அருள்மிகு ஸ்ரீ பார்வதி சமேத பரமேஸ்வரன் ஆலய மண்டலாபிஷேக பூர்த்தி விழா நாளைய தினம் செவ்வாய்க்கிழமை(23) காலை 6 மணியிலிருந்து சங்காபிஷேகத்துடன் இடம்பெறவுள்ளது.

இதன் போது ஆலய வளாகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் மற்றும் சேர்.பொன்.இராமநாதன் அவர்களது திருவுருவச் சிலைகள் திறந்து வைக்கப்படவுள்ளது.

பரமேஸ்வரா கல்லூரி இயக்குனர் சபையின் ஏற்பாட்டில் வேதாகம பாடசாலை ஆரம்ப நிகழ்வு மற்றும் கலைஞர்கள் கௌரவிப்பு என்பனவும் இடம்பெறவுள்ளது.

#SriLankaNews

Exit mobile version