யாழ். போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை

1638987600 court 2

யாழ்ப்பாண நகரில் இன்று சனிக்கிழமை நடைபெறும் சுதந்திர தின விழாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்துக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முன்வைத்த விண்ணப்பத்துக்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண கலாசார நிலையத்தில் நாளை நடைபெறும் சுதந்திர தின விழாவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்கேற்கிறார்.

இந்த நிகழ்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த போராட்டத்துக்கு தடை உத்தரவு கோரி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் விண்ணப்பம் செய்தனர்.

பாராளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version