யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் – தொழிற்சங்கங்கள் கலந்துரையாடல்

8fcd0b4c a6ff0b39 c0c38af9 jaffna teaching hospital

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையே நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்தரையாடலில் வைத்தியசாலை செயற்பாடு சுமூகமாக நடைபெறுவதற்கு சில முடிவுகள் எடுக்கப்பட்டன.

அந்த வகையிலே வைத்தியசாலையில் உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்வற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வைத்திய சாலையின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது எனவும் கூறப்பட்டது.

பொதுமக்களுக்கான ஆலோசனைகள் | அறிவுறுத்தல்கள்

1. நோயாளர்களை பார்வையிடுவதற்கு பார்வையாளர் நேரத்தில் இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

2. நோயாளருடன் வீடுதிகளில் உதவிக்காக ஒருவர் மட்டுமே தங்கி நிற்க முடியும்.

3. வைத்தியசாலை வளாகத்துக்குள் போதைப்பொருள் அல்லது மது பாவித்தவர்கள் எக்காரணத்தைக் கொண்டும் அனுமதிக்க படமாட்டார்கள்.

4. விடுதிகளில் தங்கியிருக்கும் நோயாளர்களோ அல்லது உதவியாளர்களோ இரவு 7.30 மணிக்கு பின்னர் வைத்தியசாலையை விட்டு வெளியேற அனுமதிக்கபட மாட்டார்கள்.

5. விடுதிகளில் வைத்திய நிபுணர்கள் மற்றும் வைத்தியர்கள் தங்கள் கடமைகளில் ஈடுபடும் போது உதவியாளர்கள் விடுதியை விட்டு வெளியேறி அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

6. வைத்தியசாலைக்குள் வருவர்கள் மற்றும் வைத்தியசாலை சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் நடந்து கொள்ள வேண்டும்.

7. நோயாளரை பார்வையிடுவதற்கு குழுக்களாக வருகைதருபவர்கள் எக்காரணம் கொண்டும் விடுதிகளுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

8. வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தங்கள் கடமைகளை சரிவர செய்வதற்கு பூரண ஒத்துவைப்பு வழங்க வேண்டும்.

#SriLankaNews

Exit mobile version