6 23
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாண மக்களை மிரட்டும் மர்மக் காய்ச்சல் – மற்றுமொரு ஆண் பலி

Share

யாழ்ப்பாண மக்களை மிரட்டும் மர்மக் காய்ச்சல் – மற்றுமொரு ஆண் பலி

மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் (Jaffna Teaching Hospital) சிகிச்சை பெற்று வந்த பருத்தித்துறையைச் சேர்ந்த மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பருத்தித்துறையைச் சேர்ந்த ஆனந்தகுமார் (வயது 47) என்ற நபரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் மர்மக் காய்ச்சல் பாதிப்புடன் பருத்தித்துறை – மந்திகை ஆதாரவைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்று புதன்கிழமை உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து வடக்கு மாகாணத்தில் இதுவரை மர்மக் காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று உயிரிழந்த பருத்தித்துறையைச் சேர்ந்த நபரின் மாதிரிகளும் கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அறிக்கைகள் கிடைத்த பின்னரே இறப்புக்கான காரணம் என்ன என்பது தொடர்பில் உறுதியாகத் தெரியவரும்.

இதேவேளை, மர்மக் காய்ச்சல் அறிகுறிகளுடனும், சடுதியான சுகவீனத்துடனும் வடக்கு வைத்தியசாலைகளை நாடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பருத்தித்துறை – மந்திகை ஆதார வைத்தியசாலையில் மட்டும் இதுவரை 40 பேர் மர்மக் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் அனைவரின் உடல்நிலை தொடர்பிலும் தீவிரமான கண்காணிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

உடல்நிலை சடுதியாகப் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

“அண்மையில் பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பேரிடரால், எலிக் காய்ச்சல் பரவக்கூடிய சாத்தியங்கள் உள்ளன.

அத்துடன், வேறுசில விலங்குகளின் மலத்தொற்றாலும் இவ்வாறான நோய்நிலை ஏற்படும் சாத்தியங்கள் உள்ளன.

எனவே, பொதுமக்கள் தமது சுகாதாரம், குடிதண்ணீர் ஆரோக்கியம் என்பவற்றில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும். திடீர் காய்ச்சல் மற்றும் சடுதியான சுகவீனம் ஏற்பட்டால் உடனடியாக வைத்தியசாலையை நாட வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...