யாழ். பல்கலையிலும் திலீபன் நினைவேந்தல்

ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35வது நினைவு தினம், இன்றையதினம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.

பல்கலைக்கழக வளாகம் சிவப்பு மஞ்சள் கொடிகள் கட்டப்பட்டு, தியாக தீபம் தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 9.45 மணியளவில் நினைவேந்தல் ஆரம்பித்ததுடன், தியாக தீபம் தீலிபனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அனுஷ்டிக்கப்பட்ட இந்த நினைவேந்தலில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் ஊழியர்கள் என பலரும் உணர்வுபூர்வமாக கலந்துகொண்டனர்.

IMG 20220915 WA0052

#SriLankaNews

Exit mobile version