யாழ். மாநகர முதல்வர் தெரிவு கோரம் இல்லாததால் மீளவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு உள்ளூராட்சி ஆணையாளர் செ. பிரணவநாதன் தலைமையில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது.
எனினும் சபை ஆரம்பமாகிய போது சபையில் கோரம் இல்லாததால் சபையினை அரைமணிநேரம் ஒத்தி வைப்பதாக ஆணையாளர் அறிவித்தார்.
இதனால் மீண்டும் முதல்வர் தெரிவு இன்னும் சில மணிநேரங்களில் நடைபெறவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews