8787
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். கடலில் 12 கோடி ரூபா பெறுமதியான கேரளாக் கஞ்சா மீட்பு!

Share

யாழ்ப்பாணம் கடற்பரப்பில் 12 கோடி 30 இலட்சம் ரூபா பெறுமதியான சுமார் 492 கிலோ கிராம் கேரளாக் கஞ்சாவைக் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். அத்துடன் சந்தேகநபர் ஒருவரையும் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ்ப்பாணம் கடற்பகுதியில் கடற்படையினர் இன்று காலை சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது , சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகு ஒன்றை வழிமறித்து சோதனையிட்டனர்.

அதன்போது படகில் 15 சாக்குகளில் 225 பொதிகளில் சுமார் 492 கிலோ கிராம் கேரளாக் கஞ்சாவை மீட்டுள்ளனர். அதையடுத்து படகோட்டியான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 20 வயதுடைய இளைஞரையும் கைதுசெய்தனர்.

மீட்கப்பட்ட கஞ்சா மற்றும் படகையும், கைதுசெய்யப்பட்ட இளைஞரையும் சட்ட நடவடிக்கைக்காகப் பொலிஸாரிடம் கடற்படையினர் ஒப்படைத்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் சந்தேகநபரையும் சான்றுப் பொருட்களையும் நீதிமன்றில் பாரப்படுத்த நடவடிக்கையும் எடுத்துள்ளனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
18 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அனுராதபுரம் புதைபொருள் அகழ்வு வழக்கு: 7 பேர் குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அபராதம்; முன்னாள் DIG தொடர்ந்து விளக்கமறியலில்

அனுராதபுரம், ஸ்ரவஸ்திபுர, திம்பிரிகடவெல பகுதியில் தொல்பொருள் பெறுமதியான நிலத்தில் சட்டவிரோத புதைபொருள் அகழ்வில் ஈடுபட்டதாகக் கைது...

17 2
செய்திகள்இலங்கை

மத்திய கிழக்கு போர் பதற்றம்: வெளிநாட்டு தபால் சேவைகளில் பெரும் தாமதம் – தபால் மா அதிபர் எச்சரிக்கை

sri-lanka-post-foreign-mail-delay-war மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் தீவிரமான போர்ச் சூழல் காரணமாக, இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு...

16 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் புதிய உச்சத்தைத் தொட்ட தங்கத்தின் விலை: ஒரே நாளில் 15,000 ரூபா அதிகரிப்பு

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 03, 2026) அதிரடியாக அதிகரித்துள்ளது. உலகச் சந்தையில் நிலவும்...

15 2
உலகம்செய்திகள்

ஈரான் கெராஷ் பகுதியில் நிலநடுக்கம்: போருக்கு அமெரிக்க மக்களிடையே எதிர்ப்பு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு

ஈரானின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள கெராஷ் (Gerash) நகரில் இன்று (மார்ச் 3, 2026) ரிக்டர்...