நல்லூரில் இரண்டாவது நாளாக தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்

rtjy 155

நல்லூரில் இரண்டாவது நாளாக தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல்

யாழ். நல்லூரில் தியாகதீபம் திலீபனின் இரண்டாவது நாள் நினைவேந்தலானது மிகவும் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

குறித்த நினைவேந்தலானது இன்றையதினம் (16.09.2023) நல்லூர் முருகன் ஆலயத்திற்கு அருகிலுள்ள தியாக தீபத்தின் தூபியடியில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது தியாகதீபம் திலீபனின் உருவத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.

அதன்பின்னர் தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் ஏற்பாட்டுக்குழுவினர், பொதுமக்கள் என இணைந்து அடையாள உணவுத் தவிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version