20061616 baby
இலங்கைசெய்திகள்

21 வருட காத்திருப்புக்குப் பின் 3 குழந்தைகளைப் பிரசவித்த தாய் யாழில் உயிரிழப்பு! – குடும்பத்தினர் சோகம்

Share

யாழ்ப்பாணம், கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த யோகராசா மயூரதி (வயது 45) என்ற குடும்பப் பெண், 21 வருடங்களாகக் காத்திருந்த நிலையில் 3 குழந்தைகளைப் பிரசவித்த பின்னர் நேற்று (நவ 7) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பெண் 21 வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமல் பல்வேறு சிகிச்சைகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், கடந்த ஐப்பசி மாதம் 7ஆம் திகதி (அக்டோபர்) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அவர் மூன்று குழந்தைகளை பிரசவித்தார்.

குழந்தையைப் பிரசவித்த பின்னரான 32 நாட்களில், இரண்டு நாட்கள் மட்டுமே அவர் கண் விழித்துப் பார்த்ததாகவும், ஏனைய அனைத்து நாட்களும் மயக்க நிலையிலேயே காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் சிகிச்சை பெற்று வந்த காலப்பகுதியில் குடல் மற்றும் ஈரல் ஆகிய பகுதிகளில் கிருமித்தொற்று இருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இருப்பினும், உடற்கூற்று பரிசோதனை அறிக்கை இதுவரை வெளிவரவில்லை.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Share
தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...