இலங்கை போக்குவரத்து சபையின் சேவைகளை புதிய மார்க்கத்தில் முன்னெடுக்கவும் தனியார் போக்குவரத்து பேருந்து சேவைகளை புதிய நெடுந்தூர பேருந்து நிலையத்தில் முன்னெடுக்கும் வகையில் யாழ் மாநகர முதல்வரால் சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி இன்று வெளியிட்ட மாநகர முதல்வரின் ஊடகச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
1.தனியார் பேருந்து சேவையின் உள்ளூர், வெளியூர் சேவைகள், கொழும்பிற்கான இரவு நேர சேவைகள் நீண்ட தூர பஸ் நிலையத்தில் இருந்து எதிர்வரும் 15ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் என்றும்
2.தனியாரின் உள்ளூர் சேவை பஸ்கள் நெடுந்தூர பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு தற்போது இயங்கி வரும் இடங்களில் 10 நிமிடங்கள் தரித்து நின்று பயணிகளை ஏற்றிச் செல்லும் அதேபோல் வெளி இடங்களிலிருந்து வரும் பிரயாணிகள் நெடுந்தூர பஸ் நிலையத்தில் இறக்கப்படுவார்கள் என்றும்
3.இலங்கை போக்குவரத்து சபை பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு வெளி மாவட்டங்களுக்கு செல்லும் நீண்ட தூரத்துக்கு பயணிக்கும் பெரிய பேருந்துகள் ஆஸ்பத்திரி வீதியினூடாக சத்திரசந்தியை அடைந்து அங்கிருந்து கேகேஎஸ் வீதியூடாக சென்று பிரதான வீதியை அடைந்து வெளி மாவட்டங்களுக்கான பயணத்தை மேற்கொள்ளும்
வெளியூர்களில் இருந்து வரும் பஸ்களும் அதே பாதையையே பயன்படுத்த வேண்டும் என்பதுடன் இப்பாதை ஒழுங்கு முறைஉடனடியாக நடைமுறைப் படுத்தப் படுகின்றது என்றும்
4.இலங்கை போக்குவரத்து சபை பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் வெளி மாவட்டங்களுக்கு செல்லும் நீண்ட தூரத்துக்கு பயணிக்கும் பெரிய பேருந்துகள் ஆஸ்பத்திரி வீதி ஊடாக வேம்படி சந்திக்குச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த அறிவுறுத்தல்களை பொதுமக்களுக்கு அறியத் தருவதாக குறித்த ஊடக செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
#SriLanka
Leave a comment