ஹர்த்தால் – யாழ் நகரும் முடங்கியது!!

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி நாடு தழுவிய ரீதியில் இன்று
ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், யாழ்ப்பாண நகரத்தில் அரச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டன. ஆயினும் தனியார் பேருந்துகள் எவையும் சேவையில் ஈடுபடவில்லை.

வர்த்தக நிலையங்கள் சில முழுமையாகவும் பெரும்பாலான நிலையங்கள் பகுதியளவிலும் திறக்கப்பட்டுள்ளன. மக்கள் நடமாட்டமும் குறைவாக காணப்பட்டது.

பெரும்பாலான பாடசாலைகளுக்கு மாணவர் வருகை  குறைவாக காணப்பட்டதுடன் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு வருகை தந்திருந்தனர்.

இருப்பினும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மக்கள் வரிசையில் நின்று எரிபொருளை நிரப்பிச் சென்றமையை இன்றும் அவதானிக்க முடிந்தது.

20220420 111000
#SrilankaNews
Exit mobile version