ஜூலை 1ம் திகதி தொடக்கம் யாழ் சர்வதேச விமான நிலையம் சேவையை ஆரம்பிக்கும் – நிமல் சிறிபால டி சில்வா அறிவிப்பு!

20220618 154352 1

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள் எதிர்வரும் ஜூலை 1ம் திகதி தொடக்கம் மீளவும் ஆரம்பமாகவுள்ளது.

சர்வதேச விமானங்களை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்படுவதோடு, இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த விமானங்கள் வருகை தரும் என எதிர்பார்பதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ நிமல் சிறிபால டி சில்வா அவர்கள் தெரிவித்தார்.

அத்தோடு புலம்பெயர் தமிழர்கள் தமது தாயக நிலத்துக்கு நேரடியாக விமானமூடாக வருகை தர முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

#SrilankaNews

 

Exit mobile version