அரசாங்கத்திற்கு எதிராக யாழ் மாவட்ட உயர் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களால் யாழ் நகரில் போராட்டமொன்று இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த போராட்டத்தின்போது அரசாங்கத்தினுடைய செயற்பாடுகளுக்கு எதிராகவும் அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இன்று மதியம் 12 மணியளவில் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திலிருந்து ஆரம்பித்த போராட்டம், அங்கிருந்து யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews