இலங்கைசெய்திகள்

யாழில் வீடு புகுந்து கணவன் – மனைவியை தாக்கி நகைகள் கொள்ளை

Share
24 665a8a9cb4d68
Share

யாழில் வீடு புகுந்து கணவன் – மனைவியை தாக்கி நகைகள் கொள்ளை

யாழில் (jaffna) கொள்ளையர்களால் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்ட நபரொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவம் இன்று (1.6.2024) அதிகாலை யாழ். வடமராட்சி – உடுப்பிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது.

உடுப்பிட்டி பகுதியை சேர்ந்த 42 வயதுடைய குணசிங்கம் சந்துரு எனும் நபரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் வியாபாரம் முடித்துவிட்டு அதிகாலையில் தனது வீட்டிற்கு சென்றபோது, அங்கு பதுங்கியிருந்த கொள்ளையர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது அவரால் அவலக்குரல் எழுப்பப்பட்ட நிலையில், அவரது மனைவி கணவரின் சத்தம் கேட்டு வீட்டிற்கு வெளியே ஓடி வந்துள்ளார்.

அவ்வேளை அவரது மனைவியையும் தாக்கிய கொள்ளைக் கும்பல் அவரிடம் இருந்த நகைகளை கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த வீட்டில் சத்தம் கேட்பதை அவதானித்த அயலவர்கள், அங்கு சென்று கூரிய ஆயுதத்தால் படுகாயமடைந்த நபரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

அவர் தற்போது அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இச் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
Related Articles
20 7
உலகம்செய்திகள்

காசா மக்களுக்கு விழப்போகும் பேரிடி : காசாவின் முழு கட்டுப்பாட்டையும் கைப்பற்றும் இஸ்ரேல்

காசா (Gaza) பகுதியை முழுமையாகக் கைப்பற்றி, காலவரையின்றி அங்கு தங்கள் இருப்பை நிறுவும் திட்டத்தை இஸ்ரேலின்...

14 6
இலங்கைசெய்திகள்

தபால் வாக்குகள் தனியாக எண்ணப்பட மாட்டாது:வெளியான அறிவிப்பு

இன்று நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது தபால் வாக்குகள் தனியாக எண்ணப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது....

13 6
இலங்கைசெய்திகள்

வவுனியாவில் 80 இலட்சம் பெறுமதியான நகைகள் மீட்பு

வவுனியாவில் 80 இலட்சம் ரூபாய் பெறுமதியான 35 பவுன் தங்க நகைகளினை மீட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிஸார்...

15 6
இலங்கைசெய்திகள்

வெலிக்கடை சிறைக்குள் இருந்து கைத்துப்பாக்கி மீட்பு

வெலிக்கடைச் சிறைச்சாலையின் கழிவுநீர் வடிகாண் ஒன்றின் அருகே இருந்து கைத்துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது. வெலிக்கடைச் சிறைச்சாலையின் எல்...