யாழ். எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இடம்பெற்றமோதலில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் உடுவிலை சேர்ந்த 24 வயதான இளைஞன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், யாழ் நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் எரிபொருள் பெற முண்டியடித்த இளைஞர்களிடையே குழப்பம் ஏற்பட்ட நிலையில், அது மோதலாக மாறியது.
குறித்த மோதலில், இளைஞர் ஒருர் தலைக்கவசத்தால் தாக்குதலுக்கு உள்ளன நிலையில், அவரது முகத்தில் காயமேற்பட்டது.
முகத்தில் சிறிய காயமடைந்த நிலையில் வீடு திரும்பிய இளைஞன், கடுமையாக பாதிக்கப்பட்ட நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சில நாட்கள் வைத்தியசாலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று இளைஞன், சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.
#SriLankaNews