யாழ். மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் தொடர் பணிப் புறக்கணிப்பில்!

யாழ். மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

இது தொடர்பான கடிதம் யாழ் மாவட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சங்கத்தினரால் இன்றையதினம் யாழ். மாவட்ட செயலரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடிதத்தில்,

யாழ். மாவட்டத்தில் கடமையில் ஈடுபடும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சில பிரதேச செயலகங்களில் எரிபொருள் வழங்களின்போது புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்களுக்கான அத்தியாவசிய பணிகளில் ஈடுபட முடியாத நிலைக்கு உள்ளாகியுள்ளனர்.

எரிபொருள் விநியோகத்திற்கான ஒழுங்குபடுத்தல் பணிகளில் பிரதேச செயலாளர்கள் ஈடுபட்டுள்ளபோதும், அவர்களின் கீழ் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டு வரும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் சேவைத் தேவையினை கருத்துகொள்ளாது, அவர்கள் புறக்கணிக்கப்பட்டு ஏனைய உத்தியோகத்தர்களுக்கு எரிபொருள் வழங்கப்பட்டமை தொடர்பாக எமக்கு முறையிடப்பட்டுள்ளது.

எனவே இதனை கண்டித்தும் எதிர்காலத்தில் எரிபொருள் வழங்களின் போது உரிய பொறிமுறையினை பின்பற்றி, எமது உத்தியோகத்தர்களுக்கான எரிபொருள் விநியோகம் சீராகும் வரை நாளை 04 ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் தொடர் பணிப் புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளோம் – எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

WhatsApp Image 2022 07 03 at 6.04.09 PM

#SriLankaNews

Exit mobile version