image
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ். நிவாரண நிதியில் மோசடி இருந்தால் உடன் அறிவிக்கவும்: பாதிக்கப்பட்டோர் பெயர்ப் பட்டியல் வெளியீடு!

Share

‘டித்வா’ சூறாவளிப் பேரிடரில் யாழ்ப்பாணத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக வழங்கப்பட்ட நிதி உதவியில் மோசடிகள் ஏதேனும் நடைபெற்று இருந்தால் அது தொடர்பில் உடனடியாகத் தெரியப்படுத்துமாறு பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

பேரிடரால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு வழங்கப்படும் ரூபாய் 25,000 நிதியுதவி பெறத் தகுதியானவர்கள் எனத் தெரிவானோரின் பெயர்கள் அடங்கிய விபரம் இன்று (10.12.2025) முதல் பிரதேச செயலக ரீதியாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றினை பொதுமக்கள் எவரும் பார்வையிட முடியும்.

பாதிக்கப்பட்ட எவரேனும் ஒருவரின் பெயர் பட்டியலில் இணைக்கப்படாமல் இருந்தால் அல்லது தவறான வழியில் எவரேனும் ஒருவரின் பெயர் இணைக்கப்பட்டு இருந்தால், அதுகுறித்து உரிய அதிகாரிகளுக்குத் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டச் செயலகத்தில் 30ஆம் இலக்க அறையில் இயங்கும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்திற்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு தலைவரின் இணைப்பாளர் மற்றும் யாழ். மாநகர சபை உறுப்பினர் எஸ். கபிலன் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

புகார்களைத் தெரிவிக்கும்போது உரிய ஆதாரங்களுடன் அவற்றைத் தெரிவிக்குமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...