25 68c8f80f71386
இந்தியாசெய்திகள்

லயோனல் மெஸ்ஸியின் இந்தியா சுற்றுப்பயண விவரங்கள்: 70 அடி சிலை திறப்பு, பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

Share

அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவரும் உலகப் புகழ்பெற்ற வீரருமான லயோனல் மெஸ்ஸி, 14 ஆண்டுகளுக்குப் பிறகு 3 நாள் சுற்றுப்பயணமாக இந்தியாவுக்கு வருகை தருகிறார். டிசம்பர் 13ஆம் திகதி முதல் 15ஆம் திகதி வரை அவர் மும்பை, கொல்கத்தா, ஹைதராபாத் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.

பின்னர் கொல்கத்தா சால்ட்லேக் மைதானத்தில் நடக்கும் கால்பந்து நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். அவரை பார்ப்பதற்கு 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரளுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கிருந்து ஐதராபாத் செல்லும் அவர் இரவில் தெலுங்கானா மாநில முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டியுடன் இணைந்து காட்சி போட்டியில் ஆடுகிறார்.

14-ந் திகதி மும்பைக்கு கிளம்பும் கால்பந்து சூப்பர் ஸ்டார் மெஸ்சி 45 நிமிடங்கள் நடைபெறும் பேஷன் ஷோவில் பங்கேற்க உள்ளார். அவருடன் அர்ஜென்டினா நடுகள வீரர் ரோட்ரிகோ டி பால், அவரது நீண்ட கால கிளப் வீரர் உருகுவேயின் லூயிஸ் சுவாரஸ் ஆகியோரும் இணைகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கிரிக்கெட் பிரபலங்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் பங்கேற்கிறார்கள்.

முன்னதாக மாலை 5 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் அரங்கேறும் 7 பேர் ஆடும் கால்பந்து போட்டியில் களம் கண்டு ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார். இளம் கால்பந்து வீரர்களும் அவருடன் இணைந்து விளையாட இருக்கிறார்கள். அத்துடன் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இறுதியாக 15-ந் திகதி புதுடெல்லி செல்லும் அவர் பிரதமர் மோடியுடன் கலந்துரையாடுகிறார்.

Share
தொடர்புடையது
Untitled 15
உலகம்செய்திகள்

டொனால்ட் டிரம்ப் வருகைக்கு முன்னதாக ஈரான் – சீனா அமைச்சர்கள் பேச்சுவார்த்தை: மத்திய கிழக்கில் சீனாவின் முக்கியத்துவம் அதிகரிப்பு

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இப்பிராந்தியத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அதற்கு முன்னதாக ஈரான்...

Untitled 14
செய்திகள்உலகம்

லண்டனில் யூத சமூகத்தினருக்காகப் பிரத்யேக பொலிஸ் பிரிவு: பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவு

லண்டனில் யூத சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் வெறுப்புணர்வுத் தாக்குதல்களைத்...

Untitled 13
செய்திகள்இந்தியா

தமிழகத்தில் புதிய அரசியல் மாற்றம்: காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சியமைக்கத் தயாராகும் விஜய்

தமிழக சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் தனிப்பெரும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், 108 இடங்களைக் கைப்பற்றியுள்ள...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் வசிக்கும் மாலத்தீவினரின் விசா சிக்கல்கள்: நிரந்தரத் தீர்வு குறித்து ஜனாதிபதி முய்ஸு உறுதி

இலங்கைக்கு உத்தியோகபூர்வ அரசமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள மாலத்தீவு ஜனாதிபதி டாக்டர் முகமது முய்ஸு, கொழும்பில் வசிக்கும்...