யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கணக்காளர் விபத்தில் உயிரிழப்பு!

unnamed

யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் கணக்காளர் வீதி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலியை சேர்ந்த கலைமதி சொல்லத்துரை (வயது 47) என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஆரியகுளம் சந்தியில் கடந்த 5ஆம் திகதி இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – பட்டா வாகன விபத்தில், மோட்டார் சைக்கிளில் பயணித்த இவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படார்.

இந்நிலையில் இன்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த யாழ்ப்பாண பொலிஸார் பட்டா சராதியை கைது செய்துள்ளனர்.

#SriLankaNews

Exit mobile version