rtjy 270 scaled
இலங்கைசெய்திகள்

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும் அபாயம்

Share

இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை உயரும் அபாயம்

ரஷ்யாவுக்கும் – உக்ரைனுக்கும், இஸ்ரேலுக்கும் – பலஸ்தீனத்துக்கும் இடையிலான போரினால் இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது என விவசாயத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உலக வல்லரசுகளுக்கு இடையேயான இந்த போர்ச் சூழல் நம் நாட்டையும் பாதித்துள்ளது. உலகின் பணக்கார நாடுகளுக்கு ஜலதோஷம் ஏற்படும் போது ஏழை நாடுகளுக்கு நியூமோனியா ஏற்படும் என ஒரு கதை உண்டு.

அதேபோல் ரஷ்யா, உக்ரைன் மற்றும் இஸ்ரேல், பலஸ்தீனத்துக்கும இடையிலான போரினால் இறக்குமதி பொருட்களின் விலை அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

தண்ணீர் கட்டணம் உயரும் என ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. ஆனால் இந்த நேரத்தில் தண்ணீர் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை.

எனவே, அவ்வாறான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டால், அதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்காது.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீள்வதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே ஒரே வழி. அரசியல் ஆதாயங்களுக்காக தனித்தனியாக செயல்பட்டால், அது நம்மை மேலும் படுகுழியில் தள்ளத்தான் செய்யும்.

மின் கட்டணத்தை அதிகரிப்பது நல்லதல்ல. ஆனால், நம் நாட்டில் இன்னும் அனல் மின்சாரம் மூலம்தான் அதிக மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

பொதுமக்களை ஏமாற்றும் இரகசிய கும்பல் : பெருந்தொகை பணத்தை இழக்க நேரிடலாம் – வெளியான எச்சரிக்கை
பொதுமக்களை ஏமாற்றும் இரகசிய கும்பல் : பெருந்தொகை பணத்தை இழக்க நேரிடலாம் – வெளியான எச்சரிக்கை
இந்த நாட்களில் பல பகுதிகளில் மழை பெய்தாலும், நீர்மின் நிலையங்களில் இன்னும் 100 வீதம் நீர் மின் உற்பத்தி தொடங்கவில்லை.

மின்சார சபை அதிகாரிகளும் சில தியாகங்களைச் செய்ய வேண்டும். எல்லா நேரத்திலும் மக்கள் மட்டுமே தியாகம் செய்ய வேண்டும் என்று கோருவது நியாயமானதல்ல.

எனவே இந்த நிலையில் இருந்து விடுபட நாம் அனைவரும் உழைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
20 12
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பணக்கார அரசியல் கட்சி எது தெரியுமா…!

இலங்கையில்(sri lanka) உள்ள பணக்கார அரசியல் கட்சி தேசிய மக்கள் சக்தி எனவும் அவர்களிடம் தேவைக்கும்...

19 11
உலகம்செய்திகள்

இந்தியாவுடனான போர் : பாகிஸ்தானுக்கு வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி : அந்நாட்டு பிரதமர் பெருமிதம்

பாகிஸ்தான்(pakistan) பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் இந்தியாவுடனான (india)போரில் பாகிஸ்தான் தான் வெற்றி பெற்றதாக கூறியுள்ளார். இது...

18 11
உலகம்செய்திகள்

முடிவிற்கு வருமா உக்ரைன்- ரஷ்ய போர் : புடின் விடுத்துள்ள அழைப்பு..!

போர் நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தைக்கு வரும்படி உக்ரைனுக்கு(ukraine) ரஷ்ய ஜனாதிபதி புடின் (viladdmir putin)அழைப்பு...

17 11
உலகம்செய்திகள்

ஆபரேஷன் சிந்தூர் : பலியான நூற்றுக்கணக்கான தீவிரவாதிகள்

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையானது எல்லையில் ஊடுருவிய தீவிரவாதிகளை தண்டிக்க நன்கு திட்டமிடப்பட்டு செயல்படுத்தட்ட இராணுவ நடவடிக்கை...