இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் மதத்தீவிரவாதிகள் அல்லர்: இலங்கை

24 665955f1ce1d1

இந்தியாவில் கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் மதத்தீவிரவாதிகள் அல்லர்: இலங்கை

கடந்தவாரத்தில் இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ். ஐ.எஸ் உடன் தொடர்புடைய இலங்கையர்கள் மதத் தீவிரவாதிகள் என்பதற்கான பதிவுகள் இல்லை என்று இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன (Kamal Gunaratne) தெரிவித்துள்ளார்.

கிழக்கில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், “கைது செய்யப்பட்ட நால்வரும் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்கள். மேலும், அவர்கள் மதத் தீவிரவாதிகள் என்பதற்கான பதிவுகள் இல்லை.

அதேவேளை, அவர்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், அவர்கள் பற்றிய கூடுதல் விபரங்களை வெளியிடுவது சரியான தீர்மானமாக இருக்காது” என சுட்டிக்காட்டியுள்ளார்.

Exit mobile version