4 19
இலங்கைசெய்திகள்

இசைப்பிரியாவுக்கு நடந்த கொடூரம்.. முடிச்சுக்களை அவிழ்க்கும் சரத் பொன்சேகா

Share

தமிழீழ இறுதி யுத்தத்தில் கொடூரமாக கொல்லப்பட்ட இசைப்பிரியாவின் படுகொலைக்கு எந்தவிதாரண மற்றும் அவரோடு இணைந்து செயற்பட்டவர்களே பொறுப்புக் கூற வேண்டும் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகா கடந்த நாட்களில் பல சர்ச்சைக்குரிய தகவல்களை வெளிட்டு வருகின்ற நிலையிலேயே வெள்ளைக் கொடி சம்பவம் தொடர்பிலும் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்தார்.

இந்நிலையில் தற்போது இசைப்பிரியா தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “நான் இராணுவத் தளபதியாக இருக்கும் போது பெரும் தொகையான மக்கள் சரணடைந்தனர்.

மக்களுடன் தமிழீழ விடுதலைப் புலிகள் போராளிகள் 12,000 பேர் துப்பாக்கிகளை வைத்து சயனையிட் குப்பிகளை வீசிவிட்டு சரணடைந்தனர்.

நாங்கள் அவர்களை எங்களின் மருந்து ஆடைகளை வழங்கி பாதுகாத்தோம். ஆனால் சிலர் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதாக இரு முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.

இசைப்பிரியா தொடர்பிலும் முறைப்பாடுகள் இருந்தன. வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் சிலர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டதாக தெரியவந்தது.

அதில் இசைப்பிரியாவை அழைத்து சென்றதாக குற்றச்சாட்டு இருந்தமை நான் அறிவேன். அப்போது இராணுவ புலனாய்வு பிரிவின் தலைவராக இருந்த எந்த விதாரண தொடர்பில் பேசப்பட்டது.

மேலும் வவுனியாவுக்கு பொறுப்பாக இருந்த ஜகத் ஜயசூரியவால் பலர் கடத்தப்பட்டதாகவும் பல முரணான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இராணுவ சிப்பாயிகள் தெரிவித்திருந்தனர்.

அவருக்கு எதிராக இராணுவ நீதிமன்றத்திலும் விவாரணைகள் நடைபெற்று கொண்டிருந்த இசைப்பிரியாவின் சம்பவத்தின் போது நான் இராணுவத் தளபதியாக இருக்கவில்லை.

மகிந்த ராஜபக்ச தான் ஜகத் ஜயசூரியவை இராணுவத் தளபதியாக நிமியமித்தார். நான் வேண்டாம் என சொன்னேன். அவருக்கு எதிராக பல முறைப்பாடுகள் இருப்பதால் அது வேண்டாம் என்றேன்.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி சிரித்துக் கொண்டு முரணான செயற்பாடுகளில் ஈடுபட வேண்டாம் என நியமனம் கடிதம் வழங்கும் போது கூறினார். இதற்கு அனைத்துக்கும் கட்டாயம் விசாரணைகள் நடத்தப்பட வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்த பின்னர் சிலர் சண்டியர்களாக செயற்பட்டனர். அவர்கள் தான் புனர்வாழ்வு மற்றும் ஏனைய செயற்பாடுகளில் முன்னணி வகித்தனர். அவர்களே பல முரணான செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

Share
தொடர்புடையது
images 6
செய்திகள்உலகம்

அறுவை சிகிச்சை இல்லாமல் மூளையின் துல்லியமான மாற்றங்களை அறிய புதிய MRI ஸ்கேனை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

அறுவை சிகிச்சை செய்யாமல், மூளையில் ஏற்படும் துல்லியமான மாற்றங்களைக் கண்டறிவதற்கு உதவும் புதிய MRI இமேஜிங்...

25 67a81aa32df3b
செய்திகள்இலங்கை

பாடப்புத்தக அச்சிடும் பணி நிறுத்தப்படவில்லை – கல்வி அமைச்சு விளக்கம்!

பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்களை அச்சிடும் பணிகள் நிறுத்தப்படவில்லை என்றும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட கல்வி சீர்திருத்தங்களின் கீழ் சில...

20250908031349
செய்திகள்இலங்கை

“ஹரக் கட்டா”வின் பாதுகாப்பு செலவு மாதத்திற்கு ஒரு கோடிக்கும் அதிகம்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சட்டத்தரணி முறையீடு!

பாதாள உலகத் தலைவரான நதுன் சிந்தக, ‘ஹரக் கட்டா’ என்றும் அழைக்கப்படுபவர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின்...

25 68f75f57333cd
செய்திகள்இலங்கை

ருஹுணு விவசாய பீட மோதல்: 21 மாணவர்கள் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

மாத்தறை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்று (அக்டோபர் 21) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், ருஹுணு பல்கலைக்கழக விவசாய...