பிரதமராகிறார் கரு?

karu jayasuriya 900x600 1

அனைவரும் இணங்கினால் சிறந்த செயல் திட்டத்துடன் மிகக்குறுகிய காலத்துக்கு நாட்டின் பிரதமராகத் தயார் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் அரசியல், பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ள நிலையில் அனைத்துகட்சிகளும் உள்ளடங்கிய சர்வகட்சி அரசாங்கமொன்றை அமைக்குமாறு பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பிரதமர் பதவியை ஏற்குமாறு முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதோடு முன்னாள் அமைச்சர் டளஸ் அழகப்பெரும, மைத்திரிபால சிறிசேன,நிமல்சிறிபால டிசில்வா ஆகியோரின் பெயர்களும் முன்வைக்கப்பட்டன.

இந்த நிலையில் முன்னாள் சபாநாயகர் கரு ஜெயசூரியவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர் சகல தரப்பும் உடன்படுவதாக இருந்தால் அந்தப் பொறுப்பை ஏற்கத் தயார் என்றார்.

#SriLankaNews

Exit mobile version