13 13
இலங்கைசெய்திகள்

கோட்டாபயவைப் போன்று நடந்து கொள்ளும் அநுர! தீர்வு காண்பதில் தடுமாற்றம்

Share

கோட்டாபயவைப் போன்று நடந்து கொள்ளும் அநுர! தீர்வு காண்பதில் தடுமாற்றம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இப்போது “கோட்டாபய – பகுதி 2” ஆக மாறிவிட்டாரா என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷண ராஜகருணா(Harshana rajakaruna) கேள்வி எழுப்பியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ச(Gotabaya Rajapaksa) ஆட்சிக்காலத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டபோது, எதிர்க்கட்சி உறுப்பினராக இருந்த அநுரகுமார திஸாநாயக்க கடும் கண்டனங்களை முன்வைத்தார். ஆனால், இன்று அவரது ஆட்சியில் அதே பிரச்சினை ஏற்பட்டுள்ளபோது அவரால் தீர்வை வழங்க முடியாமலிருக்கின்றது எனவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(12) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,

சபாநாயகர் மீது மாத்திரமின்றி மேலும் சில அமைச்சர்களது பட்டங்கள் தொடர்பிலும் தற்போது தகவல்கள் வெளிப்படுத்தப்படுகின்றன.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் இருந்ததைப் போன்று போலியான பட்டதாரிகள் தேசிய மக்கள் சக்தி அரசிலும் உள்ளனர்.

மக்களின் பாரிய ஆணையைப் பெற்றுள்ள கட்சி என்ற ரீதியில் நாட்டுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய கடப்பாடு தேசிய மக்கள் சக்திக்கு உண்டு.

அரிசி ஆலை உரிமையாளர்களை அழைத்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க(Anura Kumara Dissanayake) பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாடியிருந்த போதிலும் இன்னும் அந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கவில்லை.

கோட்டாபய ராஜபக்சவின் அதே நாடகத்தை அல்லவா இவரும் அரங்கேற்றிக்கொண்டிருக்கின்றார். மக்கள் மீண்டும் ஏமாற்றமடைந்துள்ளனரா? தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசை வலியுறுத்துகிறோம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
IMG 7681
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொத்மலையில் மாபெரும் சிரமதானப் பணி: 20 கிராமங்களுக்கான போக்குவரத்துப் பாதையைச் சீரமைக்க 2,000 பேர் திரண்டனர்!

டித்வா (Ditwah) புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட கொத்மலை, பனங்கம்மன பகுதி மற்றும் மகா பீல்ல கால்வாய்...

MediaFile 2 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அதிவேக வீதியில் அதிரடிச் சோதனை: கடவத்தை நுழைவாயிலில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதி மற்றும் கடவத்தை வெளியேறும் நுழைவாயில் பகுதிகளில் இன்று (18)...

image b16dc0e689
செய்திகள்இலங்கை

மின்சார சபை மறுசீரமைப்பு: 2,200 ஊழியர்கள் ஜனாதிபதிக்கு அவசர கடிதம் – வாழ்க்கைத் தரம் கேள்விக்குறி என முறையீடு!

இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, விருப்ப ஓய்வுக்காக (VRS) விண்ணப்பித்துள்ள...

arast 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

1 கோடி ரூபா மோசடி செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் கைது!

இணையத்தளம் வாயிலாகத் தளபாடங்கள் (Furniture) வழங்குவதாகக் கூறி, பொதுமக்களிடமிருந்து ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை...