tamilni 156 scaled
இலங்கைசெய்திகள்

மின் தடையினால் ஏற்பட்டுள்ள பாரிய நட்டம்

Share

மின் தடையினால் ஏற்பட்டுள்ள பாரிய நட்டம்

இலங்கை முழுவதிலும் நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சாரத் தடையினால் இலங்கை மின்சார சபைக்கு பாரியளவில் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க மேற்கண்ட விடயத்தை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஐந்து மணித்தியாலங்கள் ஏற்பட்ட மின்சாரத் தடையினால் சுமார் ஆறு பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மின்சார சபைக்கு ஏற்பட்ட இந்த நட்டத்திற்கு தற்போதைய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரே பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் திகதியும் இதேவிதமாக மின்சாரத் தடை ஏற்பட்டதாகவும் இதனால் சுமார் 15 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும், நேற்றைய தினம் ஏற்பட்ட மின்சாரத் தடையினால் நேரடியாக 6 பில்லியன் ரூபா நட்டமும், மறைமுகமாக 4 பில்லியன் ரூபா நட்டமும் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...