iPhone பயனர்களுக்கு வெளியான மகிழ்ச்சித் தகவல்

25 684910c610782

அப்பிள் நிறுவனம் தனது ஐபோன் மொடல்களுக்கான புதிய இயங்குதள வசதியாக iOS 26ஐ வெளியிடுவதாக அறிவித்துள்ளது.

அதன்படி, அண்மையில் நடைபெற்ற அப்பிளின் வருடாந்த உலகளாவிய டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC), வன்பொருள் மற்றும் மென்பொருள் இயக்க முறைமைகளுக்கு “திரவ கண்ணாடி ” என்று அழைக்கப்படும் புதிய தோற்றம் அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்தவகையில் iOS 26 இயங்குதளத்தின் சிறப்பம்சங்களாக,

அப்பிளின் iOS ஏற்கனவே நேரடி குரல் அஞ்சல் மூலம் உள்வரும் அழைப்புகளைத் திரையிட அனுமதிக்கிறது , ஆனால் iOS 26 இல், அழைப்புத் திரையிடல் பயனரின் உதவியாளராகச் செயல்பட்டு, யார் அழைக்கிறார்கள் என்று கேட்கவும், பதிலளிக்க அல்லது குரல் அஞ்சலுக்கு அனுப்புவதற்கான வசதியையும் கொண்டுள்ளது.

டைனமிக் டைம் டிஸ்ப்ளே மற்றும் 3டி மூவ்மெண்ட் wallpaper வசதியை கொண்டுள்ளது. ஃபோனை இடது, வலதாக நகர்த்தினால் wallpaper 3டியாக நகரும்.

கமரா, போட்டோஸ், சஃபாரி, அப்பிள் மியூசிக் உள்ளிட்ட ஆப்களுக்கு புதிய அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஸ்பேம் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளைத் தவிர்க்க கூடுதல் வழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Genmoji, Image Playground புதிய வடிவங்களில் வழங்கப்படுகிறது. விரும்பிய வகையிலான எமோஜிகளை நாமே உருவாக்கிக் கொள்ள முடியும்.

Exit mobile version