IOC எரிபொருள் நிலையத்திற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் விஜயம்

கொழும்பிலுள்ள லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இந்திய வெளிவிவகார அமைச்சர் இன்று முற்பகல் விஜயம் மேற்கொண்டார்.

எரிபொருள் விநியோக நிலைமை குறித்து லங்கா ஐ.ஓ.சி முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா, வெளிவிவகார அமைச்சருக்கு தெரியப்படுத்தினார்.

இலங்கையில் எரிபொருளுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. வரிசையும் உருவாகியுள்ளது.

இந்நிலையிலேயே எரிபொருள் நிரப்பு நிலைமை சென்று நிலைமையை இந்திய வெளிவிவகார அமைச்சர் அவதானித்துள்ளார்.

இந்தியா வழங்கியுள்ள கடன் உதவி நிலைமையை சீர்செய்ய உதவும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

sakara

#SriLankaNews

Exit mobile version