கையெழுத்து போராட்டத்துக்கு அழைப்பு!

162379903 2890715331185527 8912980647179596936 n

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் ‘மக்களை பட்டினிச்சாவிலிருந்து மீட்போம்’ எனும் தொனிப்பொருளில் கையெழுத்து போராட்டமொன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேய தமிழ்த் தேசிய பண்பாட்டுப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர் நிஷாந்தன் இதற்கான அழைப்பை விடுத்தார்.

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்தில் நாளையதினம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு இந்த கையெழுத்து போராட்டம் இடம்பெறவுள்ளது.

இதன்போது கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டு யாழ்ப்பாண மாவட்ட செயலரிடம் இறுதியாக கையளிக்கப்படவுள்ளது.

அரசியல் கட்சிகள் பொதுமக்கள் என அனைவரும் எவ்வித பேதமுமின்றி இந்த கையெழுத்து போராட்டத்தில் பங்கேற்றுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version