இலங்கையில் முதலீடு செய்யுங்கள் – மாலைதீவுக்கு அழைப்பு

image 8082a40a70 1

இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்ய மாலைத்தீவுக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார்.

மாலைதீவு உப ஜனாதிபதி பைசல் நசீம் நேற்று (02) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது, மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைக் கருத்தில் கொண்டு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் உயர் தொழில்நுட்ப விவசாயத் துறை, கப்பல் சுற்றுலா மற்றும் உயர்தர சுற்றுலாத் துறைகளில் முதலீடு செய்யுமாறு மாலைதீவுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

காலநிலை மாற்ற பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கு இலங்கையுடன் கைகோர்க்குமாறு மாலைதீவுக்கு ஜனாதிபதி விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன், இந்த பிராந்தியத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் அச்சுறுத்தல் குறித்தும் இருவரும் கலந்துரையாடியதுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, போதைப்பொருளுக்கு எதிராகப் போராடுவதற்கு மாலைதீவின் உதவியை கோரியுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version