யாழ்ப்பாணத்தில் கடமைக்கு ஒத்துழைக்க மறுத்து இடையூறு ஏற்பட்டதால் பொலிஸார் எச்சரிக்கை வேட்டுகளைத் தீர்க்க வேண்டி சம்பவம் ஊரெழு பகுதியில் பதிவாகியுள்ளது.
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் ஊரெழுப் பகுதியில் பொலிஸார் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, மோட்டார் சைக்கிள் ஒன்றில் இருவர் தலைக் கவசம் இன்றி ஆபத்தான வகையில் பயணித்துள்ளனர்.
அவர்களை வழிமறித்து சாரதி அனுமதிப் பத்திரத்தைப் பெற்று அவர்களுக்குத் தண்டப்பத்திரம் எழுத முற்பட்டபோது அவர்கள் பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர்.
அங்கு வந்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் பொலிஸாருடன் வாக்குவாதப்பட்டுள்ளார். அவர் பொலிஸாருடன் வரம்பு மீறிச் செயற்பட்டதை அடுத்து பொலிஸார் வானத்தை நோக்கி எச்சரிக்கை வேட்டுகளைத் தீர்த்தனர்.
அத்துடன், அவர்களை எச்சரித்ததாகத் தெரியவருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Leave a comment