photo 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் நாளை முதல் இணைய சேவைகளுக்கும் தடை??

Share

இலங்கையில் தொடர்ச்சியாகப் பல மணித்தியாலங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படும் நிலையில், தொலைபேசி சமிஞ்சைகளைப் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

மின்சாரம் துண்டிக்கப்படும் சந்தர்ப்பங்களில் சமிஞ்சைக் கோபுரங்களுக்கு மின்சாரத்தை வழங்குவதற்காக மின்பிறப்பிக்கிகளைப் பயன்படுத்துவதற்கு டீசல் இன்மையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது என அமைச்சின் செயலாளர் ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக, தொலைபேசி சமிஞ்சைக் கோபுரங்களின் செயற்பாடு தடைப்படுவதுடன், குறித்த வலயங்களில் இணையத்தள சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் இடையூறு ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அதற்கமைய, அனைத்து தொலைபேசி சமிஞ்சைக் கோபுரங்களுக்கும் டீசலைப் பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக விசேட மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 20
இலங்கைஅரசியல்

பழைய ஏகபோகங்களை நீக்கிப் புதிய மாஃபியாக்களை உருவாக்கக் கூடாது: மனோ கணேசன் எச்சரிக்கை!

எரிவாயு, எரிபொருள் மற்றும் மருந்து கொள்வனவுகளில் நிலவும் ஏகபோகக் கூட்டணிகளை (Monopolies) முறியடிப்பதாக ஜனாதிபதி அநுர...

02 19
செய்திகள்உலகம்

யுத்த நிறுத்தத்தை ஏற்க முடியாது, போர் முழுமையாக முடிவுக்கு வரவேண்டும்: ஈரான் வெளியுறவு அமைச்சர்!

ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இடையிலான தற்போதைய இராணுவ மோதல்கள் முடிவுக்கு வர வேண்டுமாயின், வெறும்...

01 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் சடலமாக மீட்பு: குடும்பத் தகராறில் கொலையா?

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சித்த மருத்துவத் துறையில் சிரேஷ்ட விரிவுரையாளராகப் பணியாற்றி வந்த பெண் ஒருவர், தென்மராட்சி,...

03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...