புதிய பிரதமருடன் இடைக்கால அரசு! – ஜனாதிபதி இணக்கம்

gotabaya

அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய வகையில் சர்வகட்சி இடைக்கால அரசமைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இணக்கம் தெரிவித்தார் என்று ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்கும் பொறுப்பு, சகல கட்சிகளையும் உள்ளடக்கிய வகையிலான தேசிய சபையிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

ஜனாதிபதிக்கு, 11 கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு இன்று ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்றது. இதன்போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

 

#SriLankaNews

Exit mobile version