24 67009657c22f4
இலங்கைசெய்திகள்

அரச நிறுவனங்களின் வாகன விசாரணைகள் தொடர்பில் வெளியாகிய தகவல்

Share

அரச நிறுவனங்களின் வாகன விசாரணைகள் தொடர்பில் வெளியாகிய தகவல்

ஜனாதிபதி செயலகம், அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்களின் வாகனங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு சுமார் ஒரு மாத காலம் அவகாசம் செல்லும், என தேசிய கணக்காய்வு அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஒவ்வொரு நிறுவனத்திற்கும் தொடர்புடைய அறிக்கைகள் தனித்தனியாக தயாரிக்கப்பட்டு பின்னர் ஒட்டுமொத்த அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என்ற காரணத்தினால் மேற்படி தாமதங்கள் நிலவுவதாக கூறப்படுகிறது.

இதன்படி தேசிய தணிக்கை அலுவலகம் கடந்த வாரம் விசாரணையை ஆரம்பித்ததாக கூறப்படுகிறது.

தற்போதைய விசாரணைகளின்படி அதிக எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு சரியான ஆவணங்கள் இல்லை என தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால், விசாரணை நடத்தும் தணிக்கை அதிகாரிகளும் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், தங்கள் நிறுவனத்துக்குச் சொந்தமில்லாத வாகனங்களை முறையான நடைமுறையின்றி பின்பற்றாத அதிகாரிகளுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் மேற்கண்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஐந்து தணிக்கை அதிகாரிகள் இருக்க வேண்டிய சில அரச நிறுவனங்களில் இரண்டு அதிகாரிகள் மட்டுமே இருப்பதாகவும் மேற்கண்ட வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது..

Share
தொடர்புடையது
432e7679 1282 465e 9bbd 9fff0c004877
இலங்கைசெய்திகள்

மாலைத்தீவில் 355 கிலோ போதைப்பொருளுடன் 5 இலங்கையர்கள் கைது!

355 கிலோகிராம் ஐஸ் (Ice) மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் மாலைத்தீவு பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட...

th
செய்திகள்இலங்கை

சட்டவிரோதமாகப் படகில் இந்தியா சென்ற இலங்கையர் கைது: மன்னார் குடும்பஸ்தர் தனுஷ்கோடியில் பிடிபட்டார்!

சட்டவிரோதமான முறையில் மன்னாரில் இருந்து படகு மூலம் இந்தியாவின் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியைச் சென்றடைந்த குடும்பஸ்தர்...

Untitled design 2
செய்திகள்அரசியல்இலங்கை

பொய்க் குற்றச்சாட்டு வழக்கு: தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவைக் கைது செய்யப் பிடியாணை உத்தரவு!

தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை (Thusitha Halloluwa) கைதுசெய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...