உள்நாட்டு இறைவரி சட்டம் அமுலில்!!

721187541parliamnet5 1

பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டமூலத்தின் சான்றிதழை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, இன்று (19) அங்கீகரித்தார்.

அதற்கமைய இன்றையதினம் முதல் உள்நாட்டு இறைவரி (திருத்தம்) சட்டம் அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரி விதிப்பு முறையானது மாத வருமானத்தின் மீது அசாதாரணமான அதிகபட்சமாக 36% வரி வரம்புகளை விதிக்கும்.

ஒரு இலட்சம் ரூபாக்கு மேல் மாதாந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு 6% இல் இருந்து குறைந்தபட்ச வரி வீதம் ஆரம்பிக்கும்.

மாத வருமானமாக ஒரு இலட்சம் ரூபாய் பெறுபவர்கள் வரியிலிருந்து விடுபடலாம் என்பதுடன், 350,000 ரூபா மாத வருமானம் பெறும் ஒருவர் 52,500 ரூபாயை வரியாக செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Exit mobile version