10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

Share

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சந்தித்துள்ளார் எனவும் முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை விஜயம் தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,”இலங்கை என்பது சிங்கள, பௌத்த நாடாக இருந்த போதிலும் பெரும்பான்மை இனமான சிங்கள மக்களுக்கே அநீதி இழைக்கப்படுகின்றது.

வடக்கில் 25 ஆயிரம் வரையிலான சிங்களக் குடும்பங்கள் இருந்தன. இன்று ஒருவர்கூட இல்லை. மட்டக்களப்பிலும் சிங்களவர்கள் இல்லை.

கொழும்பில் முஸ்லிம் மற்றும் தமிழர்களே வர்த்தகத்தை நிர்ணயிக்கின்றனர். இதற்குச் சிங்களவர்கள் தடை ஏற்படுத்துவதில்லை.

நிலைமை இப்படி இருந்தும் சிங்களவர்களுக்கே இனவாத முத்திரைக் குத்தப்படுகின்றது. அதிகாரத்துக்காகத் தற்போதைய அரசு பெரும்பான்மை இனத்தைக் காட்டிக்கொடுத்துள்ளது.

ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் இராணுவ அமைப்பு மற்றும் தேசியவாத அமைப்புகளுடன் சந்திப்பு நடத்தவில்லை. தமிழ்ப் பிரவினைவாதிகளை மட்டுமே சந்தித்தார்.

இரு தரப்புகள் இருப்பதை அரசு அவருக்குச் சுட்டிக்காட்டி இருக்க வேண்டும். ஆனால், அது நடக்கவில்லை.” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...