தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒமைக்ரோன் கொரோனாவை தொடர்ந்து உலக நாடுகள் தமது எல்லைகளை மூட ஆரம்பித்துள்ளன என தகவல் வெளியாகிவருகின்றன.
இந்நிலையில் இலங்கைக்கு கடந்த 14 நாட்களுக்குள் தென்னாபிரிக்கா, நமீபியா, பொட்ஸ்வானா, சிம்பாபோ, லெசதோ மற்றும் சுவிஸர்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் எவரும் வரவில்லை என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புள்ளிவிபரங்கள் மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#SriLankaNews

