அநுராதபுரத்தில் பணம் பறிக்கும் கும்பல்
அநுராதபுரம் – மரதன்கட, கணேவல்பொல நகரில் உள்ள கடைகளில் பணம் பறிக்கும் கும்பல் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், குறித்த பகுதியில் உள்ள கடையொன்றில், இரகசிய கண்காணிப்பு கருவியில் சந்தேகத்திற்கு இடமான கும்பலின் பணம்பறிக்கும் செயற்பாடு பதிவாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், காலை 11.00 மணியளவில் கடைக்கு வந்த நபர் ஒருவர் தொலைபேசி வசதி மூலம் பணப்பரிமாற்றம் செய்து சென்றுள்ளார்.
இதன்பின்னர், ஒன்றரை மணி நேரம் கழித்து கடைக்குள் நுழைந்த கும்பல், பணத்தை மாற்றிக் கொடுத்தவர் போதைப்பொருள் வியாபாரி என்று கூறி தொலைபேசி கடையின் உரிமையாளரை மிரட்டியுள்ளனர்.
பின்னர் சம்பவம் பதிவாகாமல் இருக்க கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிரீவி கேமரா அமைப்பை செயலிழக்க வைக்குமாறு கடை உரிமையாளருக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், இது தொடர்பான போதைப்பொருள் கடத்தலில் கடை உரிமையாளருக்கும் தொடர்பு இருப்பதாகவும், இந்நிலையில் அவரிடம் 6,000 ரூபாய் தருமாறும் உரிமையாளரை மிரட்டியுள்ளனர்.